Chapter 1
Verse 1.17
देहस्वरूपमात्माप्तिहेतुरात्मविशोधनम् ।
बन्धहेतुर्विवेकश्च त्रयोदश उदीर्यते ॥१७॥
Commentaries
Commentary by Maturāntakam Swāmī
தேஹ-ஸ்வரூபம் - சரீரத்தின் காரணகார்யங்களின் படியும், ஆத்ம-ஆப்தி-ஹேது: - ஆத்மஜ்ஞாநத்திற்கு ஸாதநமான குணவிசேஷமும், ஆத்ம-விசோதநம் - பந்த தசையிலும் முக்தி தசையிலும் ஆத்மாவிற்கு உள்ள வேறு பாடும், பந்த-ஹேது: - ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமும், விவேக: - ஆத்மாவை ஜ்ஞாநஸ்வரூபனாய் ஜ்ஞாநகுணமுடையவனாய் அசேதந விலக்ஷணமாக அறிகையும், ச ஆத்மஸ்வரூபமும், தேஹத்தின் ஸ்வரூபசோதநமும், த்ரயோ தசே - பதின்மூன்றாமத்யாயத்திலே, உதீர்யதே - சொல்லப்படுகிறது.
अत्र भाष्यम् - तत्र तावत्त्रयोदशे देहात्मनोस्स्वरूपं देहयाथात्म्यशोधनं देहवियुक्तात्मप्राप्त्युपायो विविक्तात्मस्वरूप[संशोधनं तथाविधस्यात्मनश्चाचित्संबन्धहेतुस्ततो विवेकानुसन्धानप्रकारश्चोच्यत इति । अत्र देहस्वरूपमित्यनेनैवाभिप्रेत देहात्मनोस्वरूपमिति देहयाथात्म्यशोधनमिति च विवृतम् । आत्माप्तिहेतु:-अमानित्वम् (१३.७) इत्यादिभिरुक्तः । आत्मविशोधनंज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि (१३.१२) इत्युपक्रम्य कृतम् । बन्धहेतुस्तु, कारणं गुणसंगोऽस्य सदसद्योनिजन्मसु (१३.२१) इत्युक्तः । ध्यानेनात्मनि पश्यन्ति (१३.२४) इत्यादिना विवेकानुसन्धानप्रकारो यथाधिकारं दर्शितः ॥
இந்த ஸங்க்ரஹத்தையடியொற்றிப் பதின் மூன்றாமத்யாயத்திலே பாஷ்யமாவது- ''மூன்றாவது ஷட்கமெனும் ஆறு அத்யாயங்களில் முதலாவதான பதின்மூன்றாமத்யாயத்திலே சரீரம் ஜீவன் இவர்களுடைய ஸ்வரூபமும், சரீரத்தின் உண்மையைத்தெரிவிக்கையும், தேஹ ஸம்பந்தமற்ற ஆத்மாவை அடைவதற்கு உபாயமும், ப்ரக்ருதி ஸம்பந்தமற்ற ஆத்மஸ்வரூபத்தைப்பற்றிய சோதநமும், அத்தகைய ஜீவாத்மாவிற்குச் சரீர ஸம்பந்தமேற்படுவதற்குக் காரணமும், அசித்திலிருந்து பிரித்து ஆத்மாவை அநுஸந்தாநம் செய்ய வேண்டிய முறையும் சொல்லப்படுகிறது'' என்று.
மூலத்தில் தேஹஸ்வரூபமென்றதனால் ஆத்மஸ்வரூபமும் விவக்ஷிதமானது. தேஹம் ஆத்மா இவைகளின் ஸ்வரூபங்கள் என்றவாறு. இதையே 'தேஹயாதாத்ம்ய சோதநம்' என்று விவரணம் செய்தருளினார் பாஷ்யத்திலே.
ஆத்மாப்திஹேதுவாவது அஹங்காரமில்லாமை முதலிய கீதையில் சொல்லிய குணங்கள். ஆத்மாவைப் பற்றிய சோதநமாவது, 'அறியப்படவேண்டிய ஆத்மாவைப் பற்றிச் சொல்லுகிறேன்'' என்று ஆரம்பித்துச் செய்யப் பட்டுள்ளது.
பந்தத்திற்குக்காரணமாவது - "இவ்வாத்மாவிற்கு ஸத்வம் முதலிய குணங்களின் ஸம்பந்தமானது நல்லதும் கெட்டதுமான பிறவிகளைத்தருகின்றது'' என்று சொல்லியுள்ளது.
ஆத்மாவைப்பற்றிய விவேகாநுஸந்தாக முறையானது யோகபூர்த்தியைப்பெற்றவர். அதைப்பெறாதவர் என்றாற் போலுள்ள அவரவர்களுடைய அதிகாரத்திற்கு ஏற்றவாறு சொல்லப்பட்டுள்ளது. அதாவது - ஸாக்ஷாத்காரத்திற்கு வேண்டிய மனநிலை பக்குவமாயிருக்கும் முக்யாதிகாரிகள் அந்நிலையாகிய த்யாநத்தினாலே தன் சரீரத்திலுள்ள ஜீவாத்மாவை மநஸ்ஸினால் ஸாக்ஷாத்காரம் செய்கிறார்கள் என்றிவ்வாறு சொல்லப்பட்டது.
ஊனின் படியும் உயிரின் பிரிவும், உயிர் பெறுவார்
ஞானம் பெறுவகையுஞ் ஞானமீன்றவுயிர்ப்பயனும்
ஊனின்றதற்படியும் உயிர்வேறிடுமுள் விரகும்
தேனின்றபாதன் தெளிவித்தனன் சிலைப்பார்த்தனுக்கே. 14
தேன் தங்கும் பூப்போன்றத்திருவடிகளையுடையக் கண்ணன், வில்லில் வல்லவனான அர்ஜுனனுக்குச் சரீரத்தின் ஸ்வரூபத்தையும், சரீரத்தில் நின்றும் வேறுபட்டிருக்கும் ஜீவாத்மாவின் தன்மையையும், அஜ்ஜீவாத்மாக்கள் ஆத்மஜ்ஞானத்தைப் பெறுவதற்கு வேண்டிய உபாயங்களையும், ஆத்மாவை அறியச் சாதநமான அமாநித்வம் முதலிய குணங்களால் உண்டாகும் ஆத்ம ப்ராப்தியாகிய பலத்தையும், இச்சரீரம் நிற்பதற்கானக் காரணத்தையும், ஆத்மாவைச் சரீரத்தில் நின்றும் வேறுபடக்காண்பதற்குத் தேவையான அந்தரங்க உபாயத்தையும் விளக்கினான்.