Chapter 1
Verse 1.28
ऐकान्त्यं भगवत्येषां समानमधिकारिणाम् ।
यावत्प्राप्ति परार्थी चेत् तदेवात्यन्तमश्नुते ॥२८॥
Commentaries
Commentary by Maturāntakam Swāmī
ஏஷாம் அதிகாரிணாம் - இம்மூன்று அதிகாரிகளுக்கும், பகவதி ஐகாந்த்யம் - எம்பெருமானிடமே உபாயமாக நிலை நிற்கையானது, ஸமாநம் - பொதுவானது, யாவத் ப்ராப்தி - பகவானையடையும் வரையில், பர-அர்த்தீ சேத் - எம்பெருமானையேப் பலமாகவும் விரும்புவனேயாகில், அத்யந்தம் - அழிவில்லாத, தத் ஏவ - அந்தப்பரம பதத்தையே, அச்நுதே - அநுபவிக்கின்றான்.
एवमतिशयितैश्वर्यकैवल्यभगवत्प्राप्तयर्थिनामधिकर्तव्याया भक्तस्सारभूतं साधारणं रूपं निष्कर्षयति । ऐकान्त्यमिति । ऐकान्त्यमत्रानन्यदेवताकत्वम् । 'चतुर्विधा मम जना भक्ता एव हि ते स्मृ[म]ताः । तेषामेकान्तिनः श्रेष्ठास्ते चैवानन्यदेवताः ॥' (भा. आश्व. ) इत्यनुगीतावचनम् ज्ञानिनामैकान्त्यस्य नित्यत्वाभिप्रायेण। अत्र तु यावत्स्वाभिभतफललाभमैकान्त्य समानमित्युच्यते । एतेन कर्मयोगज्ञानयोगावस्थयोरप्यैकान्त्यं सिद्धम्; सर्वत्र भगवत्प्रपत्तिपूर्वकत्वावश्यंभावात् । एवमचिदनुभवात्स्वानुभवाच्च विलक्षणमीश्वरानुभवमभ्यर्थय. मानस्याधिकार्यन्तरव्यावृत्तात्यन्तिकत्व लक्षणभक्तिवैशिष्टयादव्यवधानेनात्यन्तिकतत्प्राप्तिमाह - यावदिति । फलान्तरसङ्गरूपान्तरायानुपहतश्चेदव्यवधानेन भगवन्तं प्राप्य पुनस्संसारं न प्राप्नोतीत्यर्थः । पदाभिप्रायेण तदिति नपुंसकत्वम् ॥२८॥
முன் சொல்லியவாறு மேலான ஐச்வர்யத்தையும், கைவல்யத்தையும், மோக்ஷத்தையும் விரும்புமவர்களுக்குச் செய்யப்பட வேண்டிய பக்தியின் ஸாரமானப் பொதுவான ஆகாரமின்னதென்றுத் தெளிவிக்கின்றார் 'ஐகாந்த்யம்' என்கிற பகுதியினால். ஐகாந்த்யமாவது இங்கு தேவதாந்தரத்தில் பற்றில்லாமை. ஆனால் ஆச்வமேதிக பர்வத்தில் அநுகீதையிலுள்ள வசநத்தில், ''ஐச்வர்யார்த்தி, ஆர்த்தன், கைவல்யார்த்தீ, மோக்ஷார்த்தீ என்கிற நால்வரும் என்னுடைய ஜனங்கள். எல்லோரும் பக்தர்களே. அவர்களில் ஜ்ஞாநிகள் எனும் ஏகாந்திகள் சிறந்தவர்கள். அவர்கள் என்னைத் தவிர்த்துத் தேவதை வேறொன்றை ஆச்ரயிக்கமாட்டார்கள்” என்றுளதே. இதில் ஜ்ஞாநிகளையே ஏகாந்திகள் என்கிறதே எனில், மற்றவர்களுக்கு ஏகாந்த நிலையில்லை என்று இதன் கருத்தன்று. ஜ்ஞாநிகளுக்கு உபாய தசையில் ஆரம்பித்துள்ள ஐகாந்த்யம் எப்பொழுதும் தொடர்ந்து வருகிறது என்று கருத்து. தம்தம் பலம் பெறுமளவும் மற்றவருக்கும் ஐகாந்த்யமானது ஸமாநமென்று இங்குச் சொல்லப்படுகிறது.
பக்திக்கு ஐகாந்த்யம் வேண்டுமென்றதனால் கர்மயோகம், ஜ்ஞாநயோகம் ஆகிய நிலைகளிலும் பகவானே உபாயமென்கிற ஏகாந்திநிலை வேண்டுமென்று சொன்னதாகிறது. ஏனெனில், பகவானைச் சரணம் புகுதலாகிய ப்ரபத்தியானது கர்மயோகாதிகளிலும் உண்டு. ப்ரபத்தியானது பகவானே உபாயமென்றிருக்கும் ஏகாந்திகளுக்கே கூடுமன்றோ.
இவ்வாறு ப்ராக்ருதமான ஐச்வர்யத்தை அனுபவிப்பதிலும், ஸ்வாத்மாநுபவமாகிற கைவல்யத்திலும் சிறந்தது பகவதநுபவமாகிற மோக்ஷம். இதையே விரும்புமவனுக்கு மற்றுள்ளாரிடமில்லாத நிலை நின்ற சிறந்த பக்தியினால் ஸாக்ஷாத்தாகவே சாச்வதமான பகவதநுபவமேற்படுகிறதென்கிறார் 'யாவத்' என்பதினால். சிற்றின்பங்களில் பற்றுதலாகிய இடையூறு ஏற்படாவிடில், நேராகவே பகவதநுபவம் பெற்று மறுபடி கர்மபந்தம் பெறுவதில்லை என்று இதன் பொருள்.
இங்கு 'தத்' என்பதற்கு 'தயைவாப்நோதி தத்பதம்' என்று முன் சொல்லிய பதத்தில் நோக்கு. ஆதலால் நபும்ஸகலிங்கமாயிற்று. பூர்வார்தத்தில் சொல்லிய பகவானைக் குறிப்பதாகில் புல்லிங்கமாயிருக்கவேண்டுமன்றோ.